ரஜினிகாந்தின் உடல்நலம் சீராக இருக்கின்றது. -லதாரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து அவர் மனைவி லதா கூறும்போது, “ரஜினிகாந்தின் உடல்நலம் சீராக இருக்கின்றது. அவர் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை.” என விளக்கமளித்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
உடல்நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நலமுடன் உள்ளார் என்றும், உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம் எனவும் மேலும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்று கூறிய அவர் தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார்.
Tags : “ரஜினிகாந்தின் உடல்நலம் சீராக இருக்கின்றது. -லதாரஜினிகாந்த்