உதம்பூர் நகரில் 8 மணி நேரத்தில் மர்மமான முறையில் இரட்டை குண்டுவெடிப்புகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் நகரில் 8 மணி நேரத்தில் மர்மமான முறையில் இரட்டை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பேருந்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் இருவர் காயம் அடைந்தனர்.
புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, உதம்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் மற்றொரு குண்டுவெடிப்பு ஏற்பட்டது.அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.வெடிகுண்டு வெடித்த இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர்."உதம்பூரில் எட்டு மணி நேரத்திற்குள் இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; முதல் குண்டுவெடிப்பில் இரண்டு பேர் காயம் அடைந்தனர், இப்போது ஆபத்தான நிலையில் உள்ளனர், இரண்டாவது குண்டுவெடிப்பில் காயம் ஏதுமில்லை" என்று உதம்பூர்-ரியாசி டிஐஜிதெரிவித்துள்ளார்.பேருந்தில் குண்டு வெடிக்கும் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி.கேமராக்களில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.
Tags :