ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து இனி புகார்கள் வராது பிரதமர் மோடி

by Staff / 07-06-2024 03:39:46pm
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து இனி புகார்கள் வராது பிரதமர் மோடி

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும், இதுபற்றி அவ்வப்போது எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வந்தன. மக்களவை தேர்தலுக்கு முன்னரும் பாஜக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடலாம் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்கவில்லை. இது குறித்து பிரதமர் மோடி பேசும்போது, “ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர் கேள்வி எழுப்பியவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு அமைதியாகி விட்டனர், இனி 5 ஆண்டுகளுக்கு அது குறித்து புகார்கள் இருக்காது என நம்புகிறேன்” என்றார்.

 

Tags :

Share via