22 வயது இளைஞருக்கும் 80 வயது பாட்டிக்கும் டும் டும் டும்

by Staff / 07-06-2024 03:50:15pm
22 வயது இளைஞருக்கும் 80 வயது பாட்டிக்கும் டும் டும் டும்

கானா நாட்டில் 80 வயது பாட்டிக்கும், 22 வயதான இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நாட்டின் தலைநகர் அக்ராவில் தான் இந்த வினோதமான திருமணம் நடந்தது. தன்னை விட 58 வயது அதிகம் கொண்ட மணப்பெண்ணுக்கு மோதிரம் அணிவித்து 22 வயது இளைஞர் மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர். இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் பாட்டியின் சொத்துக்களுக்காக தான் அவரை இளைஞர் மணந்ததாக பலரும் விமர்சித்துள்ளனர்.

 

Tags :

Share via