மின்சாரம் தாக்கி சிறுமி துடிதுடித்து பலி

by Staff / 03-04-2023 05:20:15pm
மின்சாரம் தாக்கி சிறுமி துடிதுடித்து பலி

தெலங்கானா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் புதூரில் அரசுப் பள்ளியில் படிக்கும் தீக்ஷிதா என்ற மாணவி, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், சிறுமியின் மரணத்திற்கு பள்ளி ஊழியர்களின் அலட்சியமே காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo