காதலிக்க மறுக்கும் பெண்களின் வாழ்கை முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது

by Staff / 06-04-2022 12:29:19pm
காதலிக்க மறுக்கும் பெண்களின்  வாழ்கை  முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது

காதலிக்க மறுக்கும் பெண்களின் மீதான தாக்குதல் சம்பவம், பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கடந்த 2016ம் ஆண்டு இளைஞர் அரவிந்த்குமார் கத்தியால் குத்திய வழக்கு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், கைது செய்யப்பட்ட அரவிந்த்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தடையை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

 

Tags :

Share via