அமித்ஷா பதவி விலக வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

by Editor / 23-04-2025 01:56:02pm
அமித்ஷா பதவி விலக வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இச்சம்பவம் உறுதிப்படுத்துகிறது. அங்கு பயங்கரவாதமே இல்லை. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பாஜக அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகியுள்ளனர். எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று பேட்டியளித்துள்ளார்.
 

 

Tags :

Share via