திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரானார் தங்கம் தென்னரசு.

by Editor / 22-07-2023 10:31:05pm
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரானார் தங்கம் தென்னரசு.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மக்கள் வளர்ச்சித்திட்ட பணிகள் விரைந்து மக்களிடம் சென்று சேர ஏதுவாக புதிய பொறுப்பு, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக இருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories