திருப்பூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி கைது

by Admin / 13-08-2021 04:19:00pm
திருப்பூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி கைது

மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்ற அய்யப்பன், மாணவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் கொழுமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 54). இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இந்தநிலையில் கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த 16 வயதான 11-ம் வகுப்பு மாணவி வந்து சென்றுள்ளார். அவருடன் அய்யப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இதையடுத்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்ற அய்யப்பன், மாணவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். நேற்று மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே அவரது பெற்றோர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து நடந்த விவரத்தை மாணவியிடம் கேட்டறிந்த போது அய்யப்பன் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார். உடனே இதுகுறித்து சுகாதார பணியாளர்கள் குமரலிங்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo