தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா நச்சுவாயு கசிவு விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் கன்னிகை பேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா நச்சுவாயு கசிவு விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் நச்சு வாய்வை சுவாசித்ததால் மூச்சு திணறு ஏற்பட்டு வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்த விபத்து குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் மாசு கட்டுப்பாட்டு வாாிய உறுப்பினர்- செயலர் மற்றும் பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவை முதலமைச்சர் விஜய் அமைத்துள்ளார். இக்குழுவினர் நச்சுவாயு நிகழ்ந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையும் மூன்று நாட்களுக்குள் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொறுப்பு அமைச்சர்கள் சுகாதாரத்தை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடியாக மருத்துவமனைக்கும் தொழிற்சாலைக்கும் சென்று உயர்தர சிகிச்சைகளையும் வழங்க ஒருங்கிணைக்க முதலமைச்சர்உத்திரவிட்டுள்ளாா்.. விபத்தில் உயிரிழந்தவருக்கு தல 2 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு செலவிலே அவர்களது சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு தொழிற்சாலை நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :



















