ஆளுநர் விழாவை புறக்கணித்த உறுப்பினர்கள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், 2 பேராசிரியர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர். விடுதலை போராட்ட வீரரும், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் தமிழக அரசின் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர். இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உறுப்பினர்களுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக ஆளுநர் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
Tags :