போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

சேலம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மகன் விஜய், (20வயது)இவர் அந்த பகுதியில் உள்ள பாண்டி என்பவரின் மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நாமக்கல்லில் தனியாக கடை வைக்க முடிவு செய்த விஜய் வேலையை விட்டுவிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு சென்றார். இதையடுத்து விஜயை தொடர்பு கொண்ட பாண்டி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏன் வேலையை விட்டு சென்றாய் எங்கள் கடையிலேயே வேலை பார்த்திருக்கலாம் தானே என்று கேட்டனர் அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரடைந்த விஜய் பாண்டியன் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை செல்போனில் பதிவு செய்த பாண்டி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து நேற்று விசாரணை நடத்தினர் இரவு 11 மணி ஆகிவிட்டதால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் மேலும் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர் வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார் பின்னர் அங்கு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பெற்றோர் விஜய் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு கதறி அழுதனர் இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :