தென்னாப்பிரிக்காவில் இந்து கோவில் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் குவா சுலு, நடால் மாகாணத்தில் உள்ள ரெட் கிளிப் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த நான்கு மாடி இந்து கோவில் இடிந்து விழுந்ததில் கோவில் நிர்வாகி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நீயும் அகோபிலம் பாதுகாப்பு கோவில் விரிவாக்க பணிகளின் போது ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது .இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .பலியானவர்களில் 52 வயதான விக்கி ஜெயராஜ் பாண்டே என்பவரும் ஒருவர். இவர் கோவில் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினராகவும் கட்டுமானத் திட்டத்தின் மேலாளராகவும் உள்ளார் .காங்கிரட் கலவை கொட்டப்படும் போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது .மேலும் இந்த கோவில் கட்டுமானத்திற்கு உள்ளூர் நகராட்சி இடம் முறையான கட்டுமான அனுமதி பெறப்படவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .இச்சம்போ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ,மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டன. இந்த விபத்து தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Tags :



















