தமிழ்நாட்டில் இன்றுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நிறைவடைந்தன.
தமிழ்நாட்டில் இன்றுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நிறைவடைந்தன. வாக்காளர் திருத்த கணக்கிட்டு படிவங்களை சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய கூடுதல் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இதுவரை 99.55 விழுக்காடு முதல் 100% வரையிலான படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட விவரங்களுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படும். இந்த வரைவு பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது மாற்றங்கள் இருந்தால் டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . இறுதி வாக்காளர் பட்டியல் 2026 ,பிப்ரவரி 17ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















