நடிகர் வடிவேலுக்கு கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் போலி.
அண்ணா பல்கலையில் கடந்த வாரம் நடிகர் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது போலி என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை கழகம் புனிதமான இடம். இது போன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம் எனக் கூறியவர் அண்ணா பல்கலைக்கழகவளாகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.. இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.-அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்.கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; நீதியரசர் வள்ளிநாயகம் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளார்
Tags :