கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது

by Editor / 13-06-2025 02:49:00pm
 கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது

கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நடந்த சோதனையில், ரஹமத் சந்திரா (68) என்ற மூதாட்டி, கல்லூரி மாணவர்களுக்கே நேரடியாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இந்தச் சோதனையில் 14 கிலோ கஞ்சா, ரூ.4,000 பணம் மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று அவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via