by Staff /
12-07-2023
04:02:35pm
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ரயில் பயணிகள் வசதிக்காக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) வாயிலாக 120 நாள்களுக்கு முன்பாக, பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை நவ. 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நவ. 9-ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையும் படிக்க | போக்குவரத்து விதிமீறல்: நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்! இதேபோல, நவ. 10-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13-ஆம் தேதி(நாளை) முதலும், நவ. 11-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவ. 12-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் முன்பதிவு செய்யலாம்.
Tags :
Share via