வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம்

by Editor / 29-09-2021 06:01:02pm
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம்



கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோழிக்கோடு வந்து இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்து வயநாடு தொகுதிக்கு கார் மூலம் செல்கிறார் .தொகுதியில் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரனும். கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சதீஷனும் ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார்கள்.


சென்ற வாரம் கட்சியிலிருந்து மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சுதிரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மாநில அரசியல் விவகார குழுவிலும் உறுப்பினராக இருந்தார். இரண்டு பதவிகளிலும் இருந்து ராஜினாமா செய்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவி சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுச் செயலாளரும் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தெரிவிக்கும் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதில்லை என்றும் தன்னிஷ்டப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் சுதிரன் குற்றம்சாட்டினார்.
சுதிரன் கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னிதலா, முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோரும் ஆதரித்துள்ளனர், இந்த நிலையில் சுதாகரனும் சதீஷனும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர்.முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தரிக் அன்வார் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கட்சித் தலைமைக்கு அறிக்கை தந்து இருப்பதாக கூறப்படுகிறது.


கட்சியில் இருந்து ராஜினாமா செய்த சுதிரன், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க கோரியுள்ளார்களா என்று தெரியவில்லை.

 

Tags :

Share via