"அதிமுக அணையா விளக்கு"ஆர்.பி.உதயகுமார்

by Staff / 31-05-2024 01:19:43pm


அதிமுக அணையா விளக்கு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் அதிமுக, ஆர்.பி.உதயகுமார் பதிலடி. அதிமுக அணையும் விளக்கு என அண்ணாமலை நேற்று பேட்டியளித்த நிலையில், "அதிமுக எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், மக்கள் இயக்கமாக வெற்றிக் கொடி நாட்டும். அதிமுக ஒரு அணையா விளக்கு. தமிழ் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிற கலங்கரை விளக்கு. அதிமுக என்ற ஆணிவேர் 2 கோடி தொண்டர்களால் உருவான ஆலமரம். அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்" என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

 

Tags :

Share via