ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படைகள் வீசிய வெடி குண்டுகண்டெடுக்கப்பட்டுள்ளது. 

by Admin / 09-08-2023 10:18:23am
ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படைகள் வீசிய வெடி குண்டுகண்டெடுக்கப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை இரவு ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படைகள் வீசிய வெடி குண்டு டூ செல் டாப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது..  500 கிலோ எடை கொண்ட  இந்த வெடி குண்டுகள் போரின் போது அமெரிக்க  ராணுவத்தினரால் வீசப்பட்ட குண்டுகள் .இவை வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்ததால் அதனை தற்பொழுது ஜெர்மன் மேற்கு பகுதியான டூ செல் டாப்பு நகரத்தினுடைய மிருக காட்சி சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டை ஜெர்மனி வெடிகுண்டு நிபுணர் களும் காவல்துறையினரும் குண்டை வெடிக்க வைக்கும் முயற்சியாக 1640 சதுர அடி சுற்றளவு உள்ள பகுதிகளில் வாழும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை வெளியேற்றினர்  வெடிக்க செய்து செயலிழக்கும் பணியின் போது எதுவும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை ஜெர்மன் அரசு மேற்கொண்டது .

. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் தங்களுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினர். நீண்ட தூர செல்லும் ரயில் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன .உள்ளூர் பேருந்து முழுவதும் நிறுத்தப்பட்டன. இது போன்றகுண்டு கள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்படுவது இது முதல் முறை அன்று. இதற்கு முன்பு பிராங்க் பேரில் பிரிட்டிஷார் தயாரித்த குண்டு கண்டெடுக்கப்பட்டது. அப்போதும் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via