முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினம் இன்று.

by Editor / 21-05-2024 09:20:27am
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினம் இன்று.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதே போல், நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

Tags : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினம்33வது நினைவு தினம் இன்று.

Share via

More stories