பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை
1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டாவை ராஜஸ்தானில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. துண்டா தற்போது மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில் கோட்டா, கான்பூர், செகந்திராபாத் மற்றும் சூரத் வழியாக செல்லும் ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
Tags :