இலங்கை - தென் ஆப்பிரிக்கா கைதிகளுக்குள் கைகலப்பு!

சென்னையில் அமைந்திருக்கும் புழல் சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் கோமளா. புழல் சிறையில் ஒரு சில வெளிநாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் தங்கி வரும் நிலையில், இன்று திடீரென அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கச் சென்ற சிறை வார்டன் கோமளா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உணவு வரிசையில் நிற்பதில் இலங்கை - தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Tags :