சூரத் வைர வர்த்தக மையமாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி
குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த பல திட்டங்களை தொடக்கிவைத்த பின்னர் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிமிதமாக முன்னேறியுள்ளது என்றார்.
வைர ஆராய்ச்சி மற்றும் வணிக (டிரீம்) நகரத் திட்டம் முடிந்ததும், சூரத் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக உருவெடுக்கும். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இங்கு விமான நிலையத்தின் அவசியத்தை அப்போதைய மத்திய அரசிடம் விளக்கி அலுத்துவிட்டோம். இப்போது, இங்குள்ள விமான நிலையத்திலிருந்து பலர் வந்து செல்வது நகரத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இது இரட்டை இயந்திர அரசாங்கத்தின் பலன். சூரத்தின் வைரம் மற்றும் ஜவுளித் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. டிரீம் சிட்டி திட்டம் நிறைவடைந்தவுடன் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் உருவெடுக்கும் என்றார்.
Tags :