எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை பிரமாண்ட வரவேற்பு மாலை பொதுகூட்டம்
மதுரையில் அ. தி. மு. க. , தற்காலிக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, தென் மாவட்டங்களுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.அதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கு அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர். பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம். எல். ஏ. அ. தி. மு. க. வினர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி காரில் சிவகாசி புறப்பட்டுச் சென்றார்.
அங்கு காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் எடப்பாடி பழனிசாமி மாலை 4 மணிக்கு மதுரை செல்கிறார். அதன்பின், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் அ. தி. மு. க. , தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்து எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.
Tags :



















