டூவீலர் லாரி மோதி விபத்தில் வாலிபர் பலி
சேலம் நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் நேற்று காலை 10 மணியளவில் பனங்காட்டு முரம்புக்காடு என்ற இடத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, இவரின் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















