அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா

by Admin / 11-03-2026 11:02:02pm
அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா

இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விக்டோரியா பொது அரங்கில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தமிழகஅரசு சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து மொத்தம் 60 பேர் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் நிதி உதவி பெற்றவர்கள் என்பதை முதலமைச்சர் பெருமகத்தோடு சுட்டிக்காட்டியதோடு வெற்றி பெற்றவர்களை அமைதிப்படை வீரர்கள் என்றும் நிர்வாகப் பணியில் சாதாரண மக்களிடம் பணிவுடன் மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக நீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பெற்றோர்களுடன் தினமும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் பேசி அவர்களின் நலனை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்
 

அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா
 

Tags :

Share via
Logo