ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் இன்று இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. குப்வாராவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக அக்டோபர் 13 ஆம் தேதி, குப்வாராவில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொருளை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து பின்னர் அழித்தனர்.
Tags :