பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகமயத்தை இந்தியாவில் அமைக்க உடன்பாடு
குஜராத்தின் ராம்நகரில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தை அமைக்க இந்தியாவின் உலக நலவாழ்வு அமைப்பும் உடன்பாடு செய்து உள்ளன.
இந்த மையத்தின் இடைக்கால அலுவலகம் ராம்நகரில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதன்மை நோக்கம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவதும் உலக சமூகத்தின் ஒட்டுமொத்த நல் வாழ்வை மேம்படுத்துவது ஆகும் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருந்துகள் நலவாழ்வு நடைமுறைகள் உலக அளவில் புகழ்பெற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ள 170 நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் நடைமுறையில் உள்ளதாகவும் 80 விழுக்காடு மக்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்துவதாகவும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது
Tags :



















