பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை... திருடியதே தெரியாமல் கதவை மூடி வைத்த சாமர்த்தியம்...

by Admin / 28-08-2021 12:39:11pm
பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை... திருடியதே தெரியாமல் கதவை மூடி வைத்த சாமர்த்தியம்...

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடைப்பகுதியில் வீடுபுகுந்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.        
 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் மனைவி கார்த்திகா(35) இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் கார்த்திகா மற்றும் அவரின் கணவர், பிள்ளை அனைவரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுக்கா ஆபீஸ் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர். லேட்டாக வந்த அசதியால் அப்படியே தூங்கி விட்டனர்.

காலையில் கண்விழித்து பார்த்தபோது வீட்டின் கொல்லையில் இருந்த பாறை வீட்டிற்குள் இருந்ததை கண்டு மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் காசு மாலை, 5 பவுன் மாங்கா மாலை, 2பவுன் தோடு ஜிமிக்கி, 1 பவுன் செயின், 1 பவுன் குழந்தைகளின் தோடு உட்பட மொத்தம் 15பவுன் நகை, ஒரு வெள்ளி டம்ளர், 50ஆயிரம் மதிப்புள்ள ஐ போன்,  8ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து கார்த்திகா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் அழகேசன்,  மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த திருட்டு சம்பவம் நேற்று பட்டபகலில் நடந்துள்ளது.

இதில் முன்பக்க கதவை பாறையால் நெம்பி உள்ளே சென்று திருடிவிட்டு அதேமாதிரி கதவை மூடி சென்றுள்ளனர். இதனை தெரியாமல் கார்த்திகா குடும்பத்தினர் நள்ளிரவில் வந்த அசதியில் அறியாமல் தூங்கியுள்ளனர் என்று தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories