பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக குறித்து விவாதிக்கவில்லை

by Staff / 05-10-2023 03:17:42pm
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக குறித்து விவாதிக்கவில்லை

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பாஜக என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு. நாகராஜன், கே. பி. ராமலிங்கம், வி. பி. துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via