போதையில் தாயை அடித்து கொலை செய்த மகன் .... கைது
ராயப்பேட்டை, அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ஸ்ரீபிரியா, 47. இவர்களின் மகன் ராகேஷ் வர்சன், 25, மகள் சுருதிலயா, 20. இவரும் தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். இதில், ராகேஷ் வர்சன், வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் ஸ்ரீபிரியா, ராகேஷ் வர்சன் ஆகியோர் இருந்தனர். திடீரென ஸ்ரீபிரியா பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக, ராகேஷ் வர்சன் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியரின் பரிசோதனையில் ஸ்ரீபிரியா இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்தபோது, கத்தியால் கையை அறுத்துக்கொண்டு, ஸ்ரீபிரியா உடல் அருகே மகன் ராகேஷ் வர்சன் அழுதுகொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்ரீபிரியா உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், தலையில் பலத்த காயமடைந்ததால் ஸ்ரீபிரியா உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து, ராகேஷ் வர்சனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், தலையை சுவரில் மோதி தாயை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
Tags :