சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

by Staff / 12-11-2022 05:29:36pm
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் பொள்ளாச்சி எஸ். புரவி பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கபில்தேவ் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம்.

இந்தநிலையில் கபில்தேவ் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி என்னை கடத்தி சென்றார். பின்னர் மீனாட்சிபுரம் அருகே உள்ள ராமர் பண்ணையில் உள்ள கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

தற்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வருகிறார். இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்த கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்த கபில்தேவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via

More stories