ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்... பிரதமர் மோடி துறை அதிகாரிகளிடம் ஆலோசனை...

by Admin / 26-08-2021 01:15:53pm
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்... பிரதமர் மோடி துறை அதிகாரிகளிடம் ஆலோசனை...

மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
 
பிரகதி எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரயில்வே, சாலை போக்குவரத்து, மின்சார துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் எட்டு முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநிலங்களின் அதிகாரிகளும் மத்திய அரசின் துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்று திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விவரித்தனர்.

இதைத் தவிர ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்தும் மோடி கேட்டறிந்தார்.
 
அனைத்து மாநிலங்களும் விரைந்து செயல்படுத்த அவர் உத்தரவிட்டார்.  அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories