கருணாநிதி பார்முலாவை கையில் எடுத்த அதிமுக

பாஜக உடன் கூட்டணி மட்டுமே வைத்துள்ளோம் கூட்டணி ஆட்சி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 2006-இல் திமுக தலைவர் கருணாநிதியின் பார்முலாவையை அதிமுக கையில் எடுத்துள்ளது. அந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத திமுக 93 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இருப்பினும் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 5 ஆண்டை நிறைவு செய்தது. திமுக கூட்டணி மட்டுமே வைத்தது, ஆனால் ஆட்சியில் பங்கு தரவில்லை. இந்த பார்முலாவைதான் தற்போது அதிமுகவும் கையில் எடுத்துள்ளது.
Tags :