வக்ஃப் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவு.. விஜய் வரவேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டப்படி புதிய உறுப்பினரை நியமனம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்காக எப்போதும் துணை நிற்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags :