10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

by Editor / 26-03-2024 09:25:20am
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்ச 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

Share via

More stories

Logo