அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Admin / 24-07-2024 01:11:04pm
 அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும்  அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் முருகன், பெருமாள்சாமி, ஜெயராமன், ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புது வணிகம் மற்றும் வணிக இலக்கு என்ற பெயரில் சாத்தியமற்ற இலக்கு நிர்ணயித்து ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சர்வதிகாரப் போக்கினை தடுத்து நிறுத்திட கோரியும். கோவில்பட்டி கிழக்கு உப கோட்ட ஆய்வாளர் ஜிடிஎஸ் மற்றும் தபால் ஊழியர்களை புதிய கணக்கு தொடங்குவது சம்பந்தமாக மிரட்டும் போக்கினை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும். கிளை அஞ்சல் ஊழியர்களுக்கு டார்கெட் கொடுப்பதை தடுத்து நிறுத்திட கோரியும். ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு நிரந்தர பணியானை வழங்குவதில் தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பயன்களை அன்றே வழங்கிட வலியுறுத்தியும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்

 

Tags :

Share via