செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு.

by Staff / 30-09-2025 10:49:59am
செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உட்பட 40 பேர் கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் நடந்துவரும் உட்கட்சி பூசலின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவம் கட்சியின் பல்வேறு மட்டங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு.

Share via