குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த பொலிசார்

by Editor / 28-06-2022 03:37:21pm
குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த பொலிசார்

குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பல நாட்களாக போலீசாரின் கண்ணில் படாமல் பதுங்கி வாழ்ந்து வந்த கும்பல் ஒன்றை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் வரும் வழியை நோட்டமிட்ட போலீசார் அந்த சாலையில் ஜேசிபி இயந்திரம் வைத்து நிறுத்தி தயாராக இருந்தனர். பர்தோலி நகரில் சுங்கச் சாவடியை கடந்து வந்த குற்றவாளிகளின் காரை சுற்றி வளைத்து கட்டையால் சரமாரியாக தாக்கிய போலீசார் காருக்குள் இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்து இழுத்து சென்றனர்.

 

Tags :

Share via