பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலை மறைவாக இருந்த காவலர் கைது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஊத்துமலை போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு போலீஸ்காரரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய புளியங்குடி அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் (42). இவர் கடந்த 2003ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த சில மாதங் களுக்கு முன்பாக தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரும், அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிவகிரி அருகே ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில் (44) என்ற மற்றொரு போலீஸ் காரரும் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் புளியங்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் போக்சோ, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சைலேஷ், ஆலங்குளத்தில் பணியாற்றி வரும் செந்தில் ஆகியோர் கடந்த மாதம் நாட்களுக்கு முன் தலைமறைவாகிவிட்டனர்.
இதைதொடர்ந்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த போலீஸ் காரர் சைலேஷை கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய வாசுதேவ நல்லூர் அருகேயுள்ள தேசியம்பட்டியை சேர்ந்த புளியங்குடி அரசு பணிமனையில் பணியாற்றி வரும் அரசு பஸ் டிரைவர் மோகன்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவலர் செந்திலை கடந்த 10 தினங்களாக தேடி வந்த போலீசார் 31 ஆம் தேதி கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு காவலர்கள் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் உரிமிட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
Tags : பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலை மறைவாக இருந்த காவலர் கைது.