பிரதமர் மோடியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட தகவலின்படி சிறுநீரக கோளாறு காரணமாக பிரஹலாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 சகோதர சகோதரிகள் உள்ளனர். அதில் பிரஹலாதன் நான்காவது சகோதரர் ஆவார். பிரஹலாத் அகமதாபாத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார், மேலும் டயர் ஷோரூமையும் வைத்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே சென்னையில் தங்கியிருந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Tags :