இன்று இரவு மிக கனமழை இருக்கும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் அனைத்து வகையான பயணத்தையும் தவிர்த்து, பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, இதுவரை பெய்த மழையை விட இன்று மாலை அல்லது இரவில் தான் மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Tags :