தமிழகத்தில் 28-ம் தேதி அதிமுக கவன ஈர்ப்பு போராட்டம்
திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் 28-ம் தேதி அதிமுக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறது.
இதுகுறித்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும், மு.க. ஸ்டாலினின் தங்கை கனிமொழியும், மாமன் மகன் தயாநிதியும், தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் "நீட்" தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்
இப்போது "நீட்" தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, "நீட்" தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் சுருங்கிப் போய் அல்லல்படும் மக்களின் துயரத்தைப் போக்க தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ. 5/-ம், டீசல் விலையை ரூ. 4/-ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100/- மானியம் தருவதாகவும் வாக்களித்த தி.மு.க. இதுவரை தனது வாக்குறுதியைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. தமிழ் நாடெங்கும் பலமுறை மின்வெட்டு நாள்தோறும் நடைபெறுகிறது
மேலும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திமுக அரசின் மெத்தனப் போக்கை களையவும்.. அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க வருகின்ற 2ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Tags :