குடிக்க பணம் தர மனைவி மறுப்பு மனமுடைந்த கணவர் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம், 38; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி, 35; இருவரும் தொரவியில் செங்கல் சூளை கூலித் தொழிலாளர்கள். கடந்த 2 நாட்களாக பூங்காவனம் தனது மனைவி சாவித்திரியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். சாவித்திரி பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த பூங்காவனம் நேற்று காலை பூச்சி மருந்து குடித்து மயக்கமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :