டெல்லியில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 164 பேர் கைது!

by Others / 18-04-2021 10:07:39am
டெல்லியில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 164 பேர் கைது!

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்நாளில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 164 பேர் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்லியில் நிலைமை கவலை தரும் வகையில் இருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து இருப்பு குறைந்துள்ளது என்றார். டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரு நாளில் மட்டும் 24 ஆயிரத்து 375 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 167 பேர் உயிரிழந்துள்ளனர்

Tags :

Share via