வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் தமிழக விவசாயிகள்

by Editor / 15-03-2025 10:43:48am
வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் தமிழக விவசாயிகள்

100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். "ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாக சென்று கண்டுணர்ந்து அதை தங்கள் வயல்களில் செயல்படுத்தும் விதமாக 100 முன்னோடி உழவர்களை மேற்கூறிய நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

Tags :

Share via