by Staff /
09-07-2023
04:38:46pm
தமிழகத்தில் மெடிக்கலில் ஊசி போட்டுக் கொண்ட கூலி தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லை என்பதால் நேற்று மெடிக்கலில் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், சிறிது நேரத்தில் கூலி தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், தனியார் மெடிக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :
Share via