சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு அட்டவனை பதிவிறக்கம்

by Editor / 25-10-2021 05:28:27pm
சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு  அட்டவனை பதிவிறக்கம்



சிபிஎஸ்இ  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வு 2022 முதல் பருவத் தேர்வு அனுமதி அட்டைகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிபிஎஸ்இ, அட்மிட் கார்டு வெளியிடுவதற்கான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் - cbse.gov.in- ல் இருந்து மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரிய முதல் பருவத் தேர்வு அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.


சிபிஎஸ்இ ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரிய தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளது. அதேபோல சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு, 12 வாரிய முதல் பருவத் தேர்வு அட்டைவனை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்:


முதலில் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் cbse.gov.in இல் உள்நுழைய வேண்டும்.
பின்னர் முகப்புப் பக்கத்தில், "CBSE 10 th term 1 Board admit card" மற்றும் " CBSE 12th term 1 Board admit card" இணைப்பு ஒன்று வரும் அதை கிளிக் செய்யவும்.


அடுத்து உங்கள் ரோல் எண் மற்றும் பிற சான்றுகளை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
இறுதியாக CBSE வகுப்பு 10, 12 வாரியத் முதல் பருவத் தேர்வு அனுமதி அட்டைகள் காட்டப்படும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 

Tags :

Share via
Logo