மூன்று யூனிட் களில் 630 மெகாவாட் மின் உற்பத்திபாதிப்பு.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று மாலை தீ முழுவதும் அணைக்கப்பட்டது. தொடர்ந்து அனல் மின் நிலையத்திலிருந்து புகை மட்டும் வெளியேறிக் கொண்டிருந்தது.தற்போது புகை முற்றிலும் வெளியேறி விட்டதால் .நான்காவது, ஐந்தாவது யூனிட்ஸ்களில் மட்டும் மொத்தம் 420 மெகாவாட் மின்னு உற்பத்தி நடக்கிறது.ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது ஆகிய மூன்று யூனிட் களில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையே தொடர்கிறது.வயர்கள் முற்றிலும் எரிந்துள்ளதால் பழுது நீக்கி மறுசீரமைக்க குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.தீ விபத்து ஏற்பட்ட இரண்டாவது யூனிட்டில் மட்டும் மின்னு உற்பத்தியை சில தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Tags : மூன்று யூனிட் களில் 630 மெகாவாட் மின் உற்பத்திபாதிப்பு.